செய்திக் குறிப்புகள்

காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 என்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக வெளியீட்டுத் தேதியில் மாற்றம் வரும் என்று சொல்லப்பட்டது.

இப்போது இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19 ஆம் தேதி உலகம் முழுக்க படம் வெளியாகவிருக்கிறது.தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts