September 4, 2026
சினிமா செய்திகள்

கண்ணே கலைமானே இயக்குநரின் வேதனை

சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் ஒரு விநோதமான சிக்கலைச் சந்தித்திருக்கிறது.

இயக்குநர் சீனுராமசாமி, தன்னுடைய படங்களை கட்சி வேறுபாடு பார்க்காமல் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் போட்டுக்காட்டும் வழக்கத்தை அண்மைக் காலத்தில் கடைப்பிடிக்கிறார் .

அதுபோல கண்ணே கலைமானே படத்தையும் திரையிட விரும்பியிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் படம் பார்த்துவிட்டு அதைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

அடுத்து மருத்துவர் இராமதாசு சீமான் உள்ளிட்டோருக்குத் திரையிட்டுக் காட்ட விரும்பியிருக்கிறார் போலும்.

தேர்தல் நேரம் என்பதால் திமுக தலைவர் மகன் படத்தைப் பார்த்துப் பாராட்டுவது தவறாகிவிடும் என்று நினைத்து அவர்கள் பார்க்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால்,

என் எல்லாப் படங்களையும் சர்வகட்சித் தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரையிடல் செய்வதுண்டு. இம்முறை திரு.உதயநிதி செல்விதமன்னா நடித்து வரும் 22 இல் வெளிவரும்
கண்ணே கலைமானே திரைப்படத்துக்கு அவ்வாய்ப்பு இல்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன. பிரிவியூ காட்சிகளையும்.

என்று வருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

திரைப்படங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் வரும் இது புதிதாக இருக்கிறது.

Related Posts