அஜீத் படம் தள்ளிப்போனது
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம்.
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.
எப்படி இவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்கிற கேள்விகளுக்கு, இந்தப்படத்தில் அஜீத் மொத்தம் 14 நாட்கள் மட்டுமே நடிக்கவிருக்கிறாராம். அவ்வளவுதான் அவருடைய வேடம், அதனால் படப்பிடிப்பு வேகமாக நடந்து படம் தயாராகிவிடும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது மே 1 ஆம் தேதி படம் வெளியாகாது என்கிறார்கள். படம் அதற்குள் தயாராகாது என்றும் சொல்கிறார்கள். இந்தவிசயம் தெரிந்துதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படம் மே 1 வெளியீடு என்று அறிவித்தார்களாம்.











