சினிமா செய்திகள்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் -ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்புவுக்கு இன்று 35 ஆவது பிறந்தநாள். இதை அவருடைய ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடைபெற்றுள்ளது.

சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தப் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, மஹத், ஹரீஷ் கல்யான் எனப் பலர் கலந்து கொண்டனர். நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டிருந்த கேக்கை சிம்பு வெட்டி யுவன், தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார்.

இதை காணொலியாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்துகொண்டது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts