சினிமா செய்திகள்

கார்த்தியின் தேவ் பட வியாபாரத்தில் புதிய உச்சம் – படக்குழு உற்சாகம்

புது இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இலட்சுமண் தயாரித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தை தமிழகம் முழுதும் வெளியீடும் உரிமையை முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

இந்த உரிமையின் விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது. கார்த்தி படங்களுக்கு இதுவரை இருந்த வியாபாரத்தை விட இது அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இது மட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெரும் தொகையைப் பெற்றிருக்கிறதாம்.

இதனால் இந்தப்படம் வெளியாகுமுன்பே சுமார் பத்து கோடி இலாபத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.

இதனால் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

Related Posts