Uncategorized

இந்தியன் 2 படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய இந்தி நடிகர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர்.

2018 டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

அப்போது தொடங்கவில்லை.

இன்று ( சனவரி 18,2019) இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்குகிறது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம்.

படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும் அவருடைய தேதிகளும் ஒத்துப்போகவில்லை என்பதால் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டாராம்.

அவருக்குப் பதிலாக இந்தியிலிருந்து இன்னொரு முன்னணி நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts