சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி படத்துக்கு இசை இவர்தான்

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதன் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். கதையாகத் தயாராகிவிட்டாலும், திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடக்கிறதாம்.

லைகா தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி – சந்தோஷ் சிவன் இணைந்து ‘தளபதி’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். ‘தளபதி’ படத்துக்குப் பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரஜினி இப்படத்தில் தான் பணிபுரிய உள்ளார்.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ரஜினி நடிக்கும் பேட்ட படத்துக்கு இசையமைக்கும் அனிருத் அவருடைய அடுத்த படத்துக்கும் அவரே இசையமைக்கவிருக்கிறார்.

Related Posts