சினிமா செய்திகள்

2.ஓ படம் தந்த படிப்பினை – இயக்குநர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவுகள்

நவம்பர் 29 ஆம் தேதி வெளியான 2.ஓ படம், இந்தியத் திரையுலகிலேயே அதிகப் பொருட்செல்வில் உருவாக்கப்பட்ட படம் என்கிற பெருமையைப் பெற்ற படம்.

அப்படம் நான்கு நாட்களில் நானூரு கோடி ரூபாய் வசூலித்து உலக சாதனை படைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அப்படத்தின் காட்சிகள் வெறும் காட்சிகள் காட்சி ஊடகத்தின் உச்சம், காட்சி விருந்து என்றெல்லாம் புகழப்படுகின்றன.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்றிருந்தும் அப்படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனங்களில் மக்களுக்கு நிறைவு இல்லை.

பட்சிராஜன் என்கிற வேடத்தில் நடித்த அக்‌ஷய்குமார், நல்லதுதானே சொல்றாரு அவரை ஏன் கொல்லணும்? என்று சாமானியர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

உலகத்திலேயே நல்லவனுக்கும் நல்லவனுக்கும் போர் என்கிற அபத்தமான கதை அதற்குக் கொஞ்சமும் நியாயம் சேர்க்காத திரைக்கதை, உலக அளவிலான நல்லவிசயத்தைப் பேசும் கதையில் உருப்படியாய் ஒரு வசன்ம் கூட இல்லை என்று பண்டிதர்கள் விமர்சிக்கிறார்கள்.

இவை படத்தின் இயக்குநர் ஷங்கரின் காதுகளுக்கும் சென்று சேர்ந்துவிட்டன போலும்.

அடுத்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தைத் தொடங்கவிருக்கிறார் ஷங்கர்.

அப்படத்துக்கான கதை, திரைக்க்தை வேலைகள் வடிவம் பெற்றுவிட்டனவாம்.

இந்நிலையில் 2.ஓ படத்துக்கு வந்த விமர்சங்ன்களைக் கண்டு அதிர்ந்த ஷங்கர், முதல் வேலையாக ஜெயமோகனைத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தாராம்.

அடுத்து, தன்னிடம் ஏற்கெனவே பணியாற்றியவர்களில் திரைக்கதை அமைப்பில் திறமையானவர்கள், வசனங்களைத் தேர்ந்தெடுப்பதில் திறமையானவர்கள் என்று அறியப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு இந்தியன் 2 படத்தின் வேலைகளில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

அவர்கள் தனியாக இயக்குநர் ஆகிவிட்ட போதும், எனக்காக இந்தப்படத்தில் பணியாற்றுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

தன் பலவீனம் எங்கே என்பதை உணர்ந்து அதைச் சரி செய்யும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறார் என்பது வரவேற்புக்குரிய செயல்தாம் என்கிறார்கள்.

Related Posts