ஆஷ்னா இப்படி நடிப்பாரா? இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பட ஆச்சரியம்
நடிகை சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.
விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.
இவர்களோடு ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன்,இசை நடராஜன் சங்கரன்,பாடல்கள் விவேகா,கலை வைரபாலன்,
நடனம் கந்தாஸ்,சண்டைப் பயிற்சி ரமேஷ்,படத்தொகுப்பு தினேஷ்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ்.
படம் பற்றி இயக்குநர் கூறியதாவது….
இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..
சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.
கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் என்கிறார் AR.முகேஷ்
அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்.அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.
கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம் என்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.
இந்தப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி, கதையின் தன்மையைப் புரிந்துகொண்டு தாரளமாக நடித்தாராம்.இப்போது வெளியாகும் புகைப்படங்களைப் பார்த்து அவர் இப்படியெல்லாம் நடிப்பாரா? என்று திரையுலகில் ஆச்சரியப்படுகிறார்கள்.
படம் வந்தால் அந்த ஆச்சரியம் இன்னும் அதிகமாகும் என்கிறது படக்குழு.











