சினிமா செய்திகள்

நடிகர் ரமேஷ்கண்ணா மகன் திருமணம் – விஜய் முருகதாஸ் வாழ்த்து

நடிகர் ரமேஷ்கண்ணாவின் மகன் ஆர்.எஸ்.ஜஸ்வந்த்கண்ணன் கே.பிரியங்கா திருமணம் இன்று (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

மணமகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன், விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நேற்று நடைபெற்ற வரவேற்பில் ஏ.ஆர்.முருகதாஸ் குடும்பத்துடன் கலந்துகொண்டார். நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார்.

Related Posts