சினிமா செய்திகள் நடிகர்

அஜித் 59 படம் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்திய நடிகை

அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம்.

அந்தப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ (Pink) படத்தின் மொழிமாற்று எனக் கூறப்படுகிறது.

இந்தியில் மிகப்பெரும் வெற்றிபெற்ற இப்படத்தில் அமிதாப் பச்சன், டாப்சி நடித்திருந்தனர்.

அமிதாப் வேடத்தில் அஜித்தும் டாப்சி நடித்த வேடத்தில் நஸ்ரியா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்கிற செய்தியும் பரவியது.

நஸ்ரியா, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவர் ஒப்பந்தமானதை உறுதிப்படுத்தும் விதமாக நஸ்ரியா ட்வீட் செய்துள்ளார்.

அஜித், இயக்குநர் வினோத், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூவரும் இடம்பெற்றிருக்கும் வகையில் ரசிகர்கள் ஒரு படத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.

அப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நஸ்ரியா வெளியிட்டிருக்கிறார்.

இதன்மூலம் இவை எல்லாம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts