எவனும் புத்தனில்லை எந்த மாதிரியான படம்? – இயக்குநர் விளக்கம்
கதை திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்.
இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜா சி.சேகர், இசை மரியா மனோகர்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,பாடல்கள் சினேகன்
வசனம் எஸ்..சுரேஷ்குமார்
படம் பற்றி இயக்குநர் எஸ்.விஜயசேகரன் கூறும்போது….
ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது.
அண்ணன் தங்கைப் பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது.
மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலையும் இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குநர் எஸ்.விஜயசேகரன்.
ஆக்ஷன் த்ரில்லர் வகைப் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டன.
இப்படத்தின் முதல்பார்வை அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.










