தமிழக அரசோடு போட்டியிடும் விஸ்வாசம் படக்குழு
வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’.
இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார்.2019 பொங்கலன்று இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் முதல்பார்வை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பார்வை, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இன்று காலை அதே 10.30 மணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க
`தகுதி நீக்கம் செல்லும்’ என்று தீர்ப்பு வெளியானால், தற்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. `தகுதி நீக்கம் செல்லாது’ என்று தீர்ப்பு வருமேயானால், அ.தி.மு.க-வின் தற்போதைய பலம் குறைந்து ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பும் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பார்வையும் ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வழக்கின் தீர்ப்பு நேரத்தோடு விஸ்வாசம் இரண்டாம் பார்வை போட்டியிடுகிறது என்று சொல்கிறார்கள்.











