சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலக வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட சர்கார் வியாபாரம் – முழுவிவரம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் வியாபாரம் தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பொதுவாகவே வியாபாரம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் படநிறுவனங்கள் வெளியிடுவதில்லை. வியாபார வட்டாரங்களில் உலவும் தகவல் படி இவ்விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

இவை உண்மைக்கு மிக நெருக்கமான தகவல் என்பது மட்டும் உறுதி.

இப்படம் உலகம் முழுக்க முதன்முறையாக 200 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.

சென்னை 9 கோடி, செங்கல்பட்டு 22 கோடி, நார்த் சவுத் 10 கோடி, மதுரை 9 கோடி, கோவை 14.5 கோடி, சேலம் 7.25 கோடி, திருச்சி 8.50 கோடி டீகே 6.50 கோடி

ஆக மொத்தம் தமிழ்நாடு 86 கோடியே 75 இலட்சம்

இப்படத்தின் வெளிநாட்டுரிமை 23 கோடி, இந்தி உரிமை 25 கோடி, கர்நாடக உரிமை 9 கோடி, கேரள உரிமை 7 கோடி, ஆந்திர உரிமை 6.50 கோடி பாடல் உரிமை 4.50 கோடி

இப்படத்தின் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கு 30 கோடி

மொத்தம் 105 கோடி.

தமிழக உரிமை மற்றும் அனைத்து உரிமைகளையும் சேர்த்துப்பார்த்தால் 191.75 கோடி வியாபாரம் என்கிறார்கள். இவை தவிர மற்ற சில உரிமைகள் தொடர்பில் 200 கோடியைத் தொடும் என்கிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை ரஜினி படம் உட்பட வேறு எந்தப்படமும் இவ்வளவு பெரிய வியாபாரம் ஆனதில்லை என்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகின் வியாபார வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட மகிழ்ச்சியில் சர்கார் படக்குழுவினர் இருக்கிறார்கள்.

சன் தொலைக்காட்சியின் தயாரிப்பு என்பதால் இவ்வியாபாரம் சாத்தியமாகியிருக்கிறதென்கிறார்கள்.

Related Posts