ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – விரைவில் அறிவிப்பு
ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
அதற்கடுத்து ரஜினி என்ன செய்யப்போகிறார்? அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்விகளுக்குப் பல்வேறு ஆருடங்கள் சொல்லப்பட்டன.
இப்போது ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறதாம்.
அடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
அந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறாராம்.
2ஓ படத்தின். பாடல் வெளியீட்டுவிழாவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.











