சென்றாயன் வெளியேற்றம் – கமல் மீது கோபம் கொண்ட சிம்பு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்.
அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஐஸ்வர்யா காப்பற்றப்பட்டதாக அறிவித்தார் கமல்.
இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சென்றாயன் வெளியேறியிருக்கிறார்.
இது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் மகத்துடன் இணைந்து சென்றாயனைச் சந்தித்தார் நடிகர் சிம்பு.
அப்போது அவர், திருமந்திரம் நூலை கையெழுத்துப் போட்டு சென்றாயனுக்குப் பரிசளித்தார்.
சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. அந்த நூலை சென்றாயனுக்குப் பரிசாகக் கொடுத்து, கமல் மீதான கோபத்தை மறைமுகமாக சிம்பு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.











