செக்கச் சிவந்த வானம் பாடல் விழா – விஜய்சேதுபதி ஏன் வரவில்லை?
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செபடம்பர் 5 அன்று நடைபெற்றது.
விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். கார்த்திக், சின்மயி ஆகிய இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர்.
படத்தில் நடித்திருக்கும் சிம்பு,அருண்விஜய், அரவிந்த்சாமி, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
அவர், காக்காமுட்டை மணிகண்டன் எழுதி இயக்கும் கடைசி விவசாயி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறாராம். படப்பிடிப்பு வெளியூரில் நடப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.











