சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து இரண்டாம்பாகம் – இயக்குநர் அதிரடி முடிவு

ஹரஹர மஹாதேவகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.நகைச்சுவையுடன் வயது வந்தோருக்கான படமாக வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கவுதம் கார்த்திக்கை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்கிற வயது வந்தோருக்கான படத்தை இயக்கினார்.

இதே நேரத்தில் ஆர்யாவை வைத்து குடும்பத்துடன் ரசிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தையும் இயக்கினார். இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இப்போது அடுத்த படத்திற்குத் தயாராகி இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார். இவரின் அடுத்த படத்தையும் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார்.

குறைந்த செலவில் தயாராகிப் பெரிய இலாபம் கொடுத்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தையே அடுத்த படமாக எடுக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.

வயது வந்தோருக்கான படமான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்குக் கடும் எதிர் விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் துணிய என்ன காரணம்? ஒப்பீட்டளவில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமான கஜினிகாந்த்தின் வசூல் குறைவு என்பதால் இந்த முடிவை இயக்குநர் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts