September 17, 2026
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு நடிக்கும் புதியபடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்சி இயக்கத்தில் சிம்பு ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான
தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

4 நந்தி விருதுகள் உட்படப் பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றிக் கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

தற்போது இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது லைகா நிறுவனம். அஜித் அல்லது விஜய் இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

இப்போது சுந்தர்சி நடிப்பில் சிம்பு இந்தப்படத்தில்தான் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts