சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காலா?

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த கோலமாவு கோகிலா, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் நல்ல வரவேற்பு.

இருந்தாலும் இன்னும் பல பகுதிகள் வியாபாரம் ஆகாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், காலா படத்தை வெளியிட்ட பல விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தைத் தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் பணத்தை திருப்பித் தரவேண்டியிருக்கிறதாம்.

அதனால் அந்த விநியோகஸ்தர்களுக்கே படத்தைக் கொடுப்பதா? அல்லது வேறு நபர்களுக்குக் கொடுப்பதா? என்கிற விவாதம் நடப்பதால் இன்னும் வியாபாரத்தை முடிக்கவில்லை என்கிறார்கள்.

எப்படியும் சில நாட்களில் படத்தின் வியாபாரம் முடிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

காலா படத்தின் விவகாரம் கோலமாவு கோகிலா வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Related Posts