நயன்தாரா படம் பின்வாங்கிய மர்மம் என்ன?
கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இந்தத் தேதியில் படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
இந்நிலையில் அதே தேதியில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட இன்னொரு படம் நயன்தாரா நடித்திருக்கும் கோலமாவு கோகிலா.
எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், கமல் படத்தை விட நயன்தாரா படத்துக்கு திரையரங்குக்கார்ர்களிடம் அதிக வரவேற்பு இருந்ததாம்.
ஆனால் திடீரென நயன்தாரா படம் அந்தத் தேதியில் வெளியாவதில் இருந்து பின்வாங்கிவிட்டதாம்.
எதிர்பார்ப்பு இருந்த படம் பின்வாங்கியது ஏன்? என்பது யாருக்கும் தெரியவில்லை.
கோலமாவு கோகிலா படத்தைத் தயாரித்திருக்கும் லைகா நிறுவனம்
கமல் படங்களையும் தயாரிக்கிறது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதியில் இரண்டு படங்களும் வெளியாவது குறித்து அவர்களுக்குள் உரையாடல் நடந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே கோலமாவு கோகிலா தள்ளிப் போயிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.











