சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்த் சூர்யா படத்தின் பரபரப்பான கடைசிநேர மாற்றம்

அயன்,மாற்றான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா, கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் இலண்டனில் தொடங்கவிருக்கிறது. ஜூன் 25-ம் தேதி இலண்டனில் தொடங்கும் படப்பிடிப்பு, தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

இதற்காகப் படக்குழுவினர் இலண்டன் புறப்படும் நேரத்தில் ஒரு பெரிய மாற்றம் நடந்துள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஜிகர்தண்டா ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம்.

இலண்டன் புறப்படும் நேரத்தில் அவர் வர இயலாது என்று ஒதுங்கிக்கொண்டாராம்.

அவசர அவசரமாக அனேகன் படத்தில் பணியாற்றிய ஓம்பிரகாஷை அழைத்தால் அவர் மாரி 2 பட வேலைகள் இருக்கின்றன என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.

புறப்பட்டே ஆகவேண்டிய கடைசி நேரத்தில், கவண் உட்பட சில படங்களில் பணியாற்றிய அபிநந்தனை ஒப்பந்தம் செய்து அழைத்துச்செல்லவிருக்கிறார்களாம்.

இதனால், கே.வி.ஆனந்தின் படத்தில் பணியாற்றக் காத்திருந்த அவருடைய உதவியாளர்கள் மனம் நொந்திருக்கின்றனராம்.

Related Posts