அஜித்தின் விவேகம் படத்துக்கு இணையான ரேஸ் 3
விவேகம் படத்திற்கு இணையான இந்தியத் திரைப்படம் எது?
அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு இணையாக ஒரு படம் வருவது கடினம் என்றாலும், ஏறக்குறைய அந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது Race – 3.
ஒரு காட்சியில் ஒரு பெரிய படைப் பிரிவே சல்மான்கானைத் துரத்துகிறது. சுட்டுத்தள்ளுகிறது. மனிதர் சிறு காயங்களோடு தப்புகிறார். மற்றொரு காட்சியில் சல்மான்கான் செல்லும் வண்டி மலை உச்சியில் இருந்து விழுகிறது. சல்மான்கான் பறக்க ஆரம்பித்துவிடுகிறார். நமக்கு விவேகம் அஜீத் நினைவுக்கு வருகிறார்.
கொடூரமாக படம் எடுப்பதில் சிறுத்தை சிவாவுக்கு டஃப் கொடுக்கிறார் ரெமோ டிசௌஸா. ஆனால், நடிப்பில் சல்மான்கானும் அஜீத்தும் ஒரே மாதிரி. முகத்தில் எந்த பாவமும் கிடையாது. ‘தொபக்’, ‘தொபக்’ என நடந்தபடி எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரி மூஞ்சியை வைத்துக்கொள்கிறார்கள்.
– கா.முரளிதரன்











