சினிமா செய்திகள் நடிகை

சர்ச்சை இயக்குநருடன் இணைந்த நயன்தாரா

சர்ச்சைக்குரிய குறும்படங்களான மா, இலட்சுமி ஆகியவற்றின் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால், இவை பரவலான கவனத்தையும் கடும் விமர்சனங்களையும்
சந்தித்தன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின.

கே.எம்.சர்ஜுன், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், கிஷோர், யோகிபாபு ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. ஆனாலும், இன்னும் படம் வெளியாகவில்லை. இதற்கிடையில், நயன்தாராவை வைத்து ஒரு படத்தை கே.எம்.சர்ஜுன் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷ், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு எவ்வித முன்னறிவிப்புமின்று இன்று தொடங்கியிருக்கிறது.

தயாரிப்பாளர் ராஜேஷ் இதை உறுதிப்படுத்தியுள்ளார்

Related Posts