சினிமா செய்திகள்

சன் டிவி யூடியூபில் வெளியாகிறது லியோ டிரெயிலர் – ஏன்?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

இப்படம், அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் பாடலாக ‘நான் ரெடி’ என்ற பாடலை படக் குழு வெளியிட்டது. அந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் இப்படத்தின் மற்றொரு பாடலான படாஸ் வெளியானது.

இப்படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அக்டோபர் 2 அன்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில்,நேற்றிரவு லியோ தயாரிப்பு நிறுவனம் மற்றும் சன் தொலைக்காட்சி ஆகியன வெளியிட்டுள்ள பதிவில், அக்டோபர் 5 அன்று சன் தொலைக்காட்சியின் யூடியூப் தளத்தில் லியோ முன்னோட்டம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைப்பார்த்ததும், லியோ படத்தின் முன்னோட்டத்தை சன் தொலைக்காட்சியின் யூடியூப் தளத்தில் ஏன் வெளியிடவேண்டும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதற்குக் காரணம் இருக்கிறதாம்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. அதற்காக அந்நிறுவனம் சுமார் 75 கோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வளவு தொகை கொடுக்கும்போதே இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்திருந்தார்களாம்.

எதிர்பாராதவிதமாக பாடல் வெளியீட்டுவிழாவை நடத்த இயலவில்லை.

அதனால் அதற்குப் பதிலாக நடிகர் விஜய்,சன் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக ஒரு நேர்காணல் கொடுப்பார் என்று சொல்லப்பட்டது.

பல காரணங்களால் விஜய் நேர்காணல் கொடுக்கவில்லை.

எனவேதான், லியோ படத்தின் முன்னோட்டத்தை ஒளிபரப்பும் உரிமையை சன் தொலைக்காட்சியின் யூடியூப் தளத்தில் வெளியிடக் கொடுத்திருக்கிறார்களாம்.

Related Posts