சுஜா வாருணிக்கும் சிவகுமாருக்கும் விரைவில் திருமணம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை சுஜா வாருணியும், சிவாஜி பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இதை மறுத்த சுஜா வாருணி, தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, சாமி தரிசனத்திற்காகவே சிவாஜி தேவுடன் கோவிலுக்கு சென்றேன், என்று விளக்கம் அளித்தார்.
இன்னொரு பக்கம் சிவாஜி தேவ் என்று அவரை குறிப்பிடுவதும், அவரை சிவாஜியின் பேரன் என்று குறிப்பிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால், சிவாஜி குடும்பத்தில் சர்ச்சை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சிவாஜி தேவ், தனது பெயர் சிவகுமார் என்று சமூக வலைதளத்தில் அறிவித்திருப்பதோடு, சுஜா வாருணியோடு தான் 11 ஆண்டுகளாக பழகி வருகிறேன், என்று தெரிவித்து, ஒருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதோடு விரைவில் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாகச் சொல்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.











