சினிமா செய்திகள் நடிகை

தன்னைப் பற்றிய வதந்தி, உடனே விளக்கமளித்த நடிகை கஸ்தூரி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

அதே போன்று ‘பிக் பாஸ் சீஸன் 2’ இந்தாண்டு தொடங்கவுள்ளார்கள். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தனது கட்சிப் பணிகளுக்கு இடையே, இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க முடிவு செய்திருக்கிறார் கமல்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என்று பல பெயர்கள் கொண்ட பட்டியல் இணையத்தில் வெளியானது. இதில்
நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என தகவல் பரவியது.

இது குறித்து விளக்கமளித்துள்ள கஸ்தூரி, பிக் பாஸ் தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டாலும், நான் பங்கேற்க மாட்டேன். ஏனென்றால் என் லிட்டில் பாஸ் இருக்கிறான்

என்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

Related Posts