சினிமா செய்திகள் நடிகர்

படப்பிடிப்புத் தளத்துக்கு அதிகாலையில் வந்து அசத்திய சிம்பு

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம்.

சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி உட்பட ஏராளமானோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துபாயில் நடக்கிறது.

துபாய் செல்வதற்கு முன்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது.

கடப்பாவிலிருந்து சுமார் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் பல நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாம்.

அந்தக் கோட்டைக்குச் செல்ல சரியான சாலை வசதி கூட இல்லை என்கிறார்கள். படப்பிடிப்புக் குழுவினர் முயற்சியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டதாம்.

அப்ப்டி ஒரு இடத்தில் அதிகாலை நான்கு மணிக்கு முதல் ஷாட் எடுக்க வேண்டும் என்று மணிரத்னமும் சந்தோஷ்சிவனும் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதிகாலை நான்கு மணிக்கு முதல் ஷாட் என்றால் ஒரு மணிக்கு தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்பட வேண்டும்.

விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் அதிகாலையில் வந்துவிடுவார்கள், சிம்பு மட்டும் வரமாட்டாரென்று படப்பிடிப்புக் குழுவினர் பேசிக்கொண்டார்களாம்.

ஆனால் அனைவரும் வியக்கும் வண்ணம், அதிகாலை 3.55 மணிக்கு படப்ப்டிப்புத் தளத்துக்கு வந்துவிட்டாராம் சிம்பு.

அதுமட்டுமின்றி பல நாட்கள் காலை ஆறு மணிக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போதும் ஒருநாள் கூடத் தவறாமல் சொன்ன நேரத்துக்கு வந்திருக்கிறார் சிம்பு.

இதைப்பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறர்களாம். சிம்புவுக்கு ஒரு விசயம் பிடித்துவிட்டால் போதும் எல்லாம் இயல்பாக நடக்கும் என்று சொல்கிறார்கள்.

Related Posts