October 29, 2026
சினிமா செய்திகள்

ரஜினி,அஜித்,சிம்பு ரசிகர்கள் ஒன்று கூடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம் யார்? ஏன்?

நீட் தேர்வுச் சிக்கல், ஐபிஎல் ஆகியனவற்றுக்கு இணையாக ஹேப்பிபர்த்டே மணிமேகலை என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது.

அதில் போய்ப்பார்த்தால், ரஜினி, அஜித், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் மணிமேகலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு வாழ்த்துகளா? என்கிற வியப்பு எல்லோருக்கும் வரலாம்.

அதற்குக் காரணம் இருக்கிறது.

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை.. இவர், ஹுசைன் என்பவரை நீண்ட காலமாகக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, டிசம்பர் 6,2017 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 6,2017 அன்று மணிமேகலை கூறியிருப்பதாவது:

நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். இது ஓர் அதிரடி பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன். காதலுக்கு மதமே இல்லை. லவ் யு ஹுசைன். ஸ்ரீராமஜெயம், அல்லா.

இவ்வாறு மணிமேகலை தெரிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சி பிரபலம் என்பதைத் தாண்டி மதம்கடந்து காதலுக்கு மரியாதை செய்ததே அவருக்கு இவ்வளவு வாழ்த்துகள் வரக்காரணம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மணிமேகலை.

Related Posts