சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்தபடம் ஷாலினி தயாரிக்கிறார் – விவரம்

2025 ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த குட்பேட்அக்லி படம் வெளியானது.தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.

அந்தப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது.ஆனால்,இன்னும் அஜீத்தின் அடுத்தபடம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதேசமயம்,குட்பேட்அக்லி வெளியான நேரத்திலேயே அஜீத்தின் அடுத்தபடத்தையும் ஆதிக்ரவிச்சந்திரனே இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அவரும் ஓரிரு நிகழ்வுகளில் அதை உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனாலும்,அஜீத் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அஜீத்தின் அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அவருடைய மகிழுந்துப் பந்தயம் குறித்த செய்திகள் மட்டும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,விரைவில் அஜீத்தின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

அந்தப்படத்தின் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் தான்.

தயாரிப்பாளர் யார்?

அஜீத்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ், சத்யஜோதி ஃபிலிம்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் அஜீத்தின் சம்பள விசயத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன.

அதன்பின்,ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அஜீத்தின் அடுத்தபடத்தைத் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது.இப்போது அந்த நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது என்று நினைத்தால் இல்லையாம்.

அஜீத்தின் அடுத்தபடத்தின் தயாரிப்பாளர் அவரேதான் என்று சொல்கிறார்கள்.

பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவை சரியாக வராததால், தன்னுடைய உறுதியான கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கி அவரே படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படத்தைத் தயாரிப்பது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

அவருடைய தயாரிப்பு நிறுவனம் சார்பாக அடுத்தபடத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.

படப்பிடிப்பு இடங்கள் தேர்வு செய்து,மற்ற நடிகர்களின் தேதிகளைப் பெற்று பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.

அவரே தயாரிக்கும் முடிவை எடுத்தது எப்படி?

அஜீத்துக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன.வெளியிலிருந்தும் அவருடைய வளர்ச்சி பொறுக்காமல் அவருக்கு எதிராக செய்வினை போன்ற சூழ்ச்சிகள் நடைபெற்றன.

அவற்றிலிருந்து மீள,பல்வேறு கோயில்களுக்குச் சென்றார் அஜீத்.திட்டமிட்டபடி எல்லாக் கோயில்களுக்கும் சென்றுவந்த பிறகு,எல்லாச் சிக்கல்களும் நீங்கிவிட்டன.இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிதான் என்று அவருடைய நலம்விரும்பிகள் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து சொந்தத் தயாரிப்பு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இதற்காக,அஜீத்தின் மனைவி ஷாலினியே பண ஏற்பாடு மற்றும் படத்தயாரிப்பு வேலைகள் ஆகியனவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கிறாராம்.

எல்லாவேலைகளும் நிறைவடைந்து படம் தொடங்கத் தயாராகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அஜீத்தை வைத்து வேறு நிறுவனங்கள் படம் தயாரிக்காததற்குக் காரணம்,அவர் இருநூறு கோடி சம்பளம் கேட்டதுதான்.அது நடைமுறையில் சாத்தியம் இல்லையென்று பல நிறுவனங்கள் பின்வாங்கியதும் சம்பளத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டு நூறுகோடி வரை வந்துவிட்டார்.அதற்கும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இல்லை.எனவே,சொந்தமாகப் படம் தயாரித்து அதைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடிவு செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

Related Posts