சினிமா செய்திகள் நடிகர்

விசயம் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கிய சிம்பு

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார்.

அப்போது,பல கருத்துகளைத் தெரிவித்தார். அவற்றில் ஒன்று மிகவும் சர்ச்சையாகிவிட்டது. அவர், நாம் கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்கிறோம் அவர்கள் தர மறுக்கிறார்கள், இதை அப்படியே திருப்பிப் போட்டுப் பாருங்கள், தமிழ்நாட்டிடம் கர்நாடகம் தண்ணீர் கேட்கும் நிலையிருந்தால் நாம் கொடுத்துவிடுவோமா? என்று யோசிக்கவேண்டும் என்றார்.

கர்நாடகாவிற்கே தண்ணீர் இல்லாத போது அவர்கள் எப்படி நமக்கு தண்ணீர் தருவார்கள் என்றார். கர்நாடகத் தாய்மார்களிடம் வீணாகப் போகும் தண்ணீரை எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்கவேண்டுமெனப் பேசினார்.

காவிரிச் சிக்கல் பற்றிய எவ்விதப் புரிதலும் இல்லாமல் அவர் சொன்ன இந்தக் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் வருகின்றன.

ஒருவிசயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டும் அப்படி இல்லையெனில் அடிப்படையான விசயமாவது தெரியவேண்டும், எதுவும் தெரியாமல் இப்படி சொதப்பக்கூடாது என்று அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Related Posts