லோகேஷ் கனகராஜ் செய்த செயல் – தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கியுள்ள ‘கூலி’ படம் இன்று வெளியாகியுள்ளது.இப்பட வெளியீட்டை ஒட்டி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் தன்னுடைய சம்பளம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
கூலி படத்தில்ரஜினிகாந்த் சம்பளம் எவ்வளவு என்று நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எனது சம்பளம் 50 கோடி ரூபாய் என நீங்கள் குறிப்பிட்டது உண்மை. இது எனது முந்தைய படமான ‘லியோ’ வெற்றியால் சாத்தியமானது. ‘லியோ’ திரைப்படம் ரூ.600 கோடி வசூலித்தது. இதனால் எனது சம்பளமும் அந்தப் படத்தில் வாங்கியதைவிட இரண்டு மடங்கு அதிகமானது என்று லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கூலி படத்தைத் தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
இந்தப்படத்துக்கு அவருடைய சம்பளம் என்பது படத்தின் வியாபாரத்தைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.ஏனெனில் அவர் முதன்முறையாக கதாநாயகனாக நடிப்பதால் அதற்கு என்ன மதிப்பு என்பது யாருக்கும் தெரியவில்லை.
அதேசமயம் அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை முடித்த பிறகு கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார்.
அந்தப்படத்தை இயக்குவதற்கு அவர் கேட்கும் சம்பளம் சுமார் எழுபது கோடி என்று சொல்கிறார்கள்.இதனால் அந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம்.
ஏனெனில் கைதி படம் அவருடைய இரண்டாவது படம்.அந்தப்படத்துக்கு சம்பளம் எழுபது இலட்சம் கூட இல்லை.ஆனால் அதன் இரண்டாம் பாகத்துக்கு எழுபது கோடி சம்பளம் கேட்கிறார் என்பது வியப்பான விசயமாக இருக்கிறது.
இந்தத் தொகையைக் கேட்டு கைதி படத்தைத் தயாரித்த டிரிம் வாரியர் நிறுவனம் அதிர்ச்சியடைந்த காரணத்தால்,லோகேஷ் கனகராஜ் முன்முயற்சியில் பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தை உள்ளே கொண்டுவந்தாராம்.
தன்னுடைய சம்பளம் பெரிதாகத் தெரியக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த படத்தின் செல்வையே பெரிதாக்கிவிட்டாராம் லோகேஷ் கனகராஜ்.கைதி 2 படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கும் கார்த்தி மட்டுமின்றி வேறு இரு கதாநாயகர்களை உள்ளே கொண்டுவருவது உட்பட சில விசயங்களைச் சேர்த்து செலவை அதிகரித்திருக்கிறாராம்.
இதனால், கைதி 2 படத்தைத் தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.அதில் ஏதாவது அதிரடி முடிவு எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட இடமில்லை என்கிறார்கள்.











