கார்த்திக் நரேனை ஏமாற்றினாரா கவுதம்மேனன்?
துருவங்கள் 16 படமெடுத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவர், சிலநேரங்களில் ஒருவர்மீது நாம் வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலை செய்வதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நாம் செய்யாத தவறுக்காக நம் கனவு சிதைக்கப்படுவதுதான் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பாத தருணமாக இருக்கும் என்று ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது, நரகாசூரன் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கும் கார்த்திக் நரேனின் இந்த ட்வீட் எதற்கு புரியாமல் இருக்கும்போதே,
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கௌதம் மேனன், கார்த்திக் பெயரை குறிப்பிடாமல் ட்விட் செய்தார்
அதற்கு பதிலளித்த கார்த்திக், ‘எந்த இளம் இயக்குநர்களுக்கும் இதை செய்யாதீர்கள். வலிக்கிறது ‘ என ட்விட் செய்திருக்கிறார்.
இதற்குக் காரணம் என்ன? இப்போது தயாராகியிருக்கும் நரகாசூரன் படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக தயாரிப்பாளர் கவுதம்மேன்னுக்கும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இது விரைவில் சரியாகிவிடும் என்கிறார்கள்.











