கவினின் அடுத்த வெளியீடு எந்தப்படம்? – சில தகவல்கள்
கவின் இப்போது மாஸ்க்,கிஸ்,மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றில்,மாஸ்க் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.
கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பால சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இருண்மை நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த மர்மக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப்படம்,கவினின் திரைப்பயணத்தில் புதிதாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
மாஸ்க் படத்தின் பணிகள் பூஜையுடன் மே மாதம் 17 ஆம் தொடங்கியது.அம்மாத இறுதியிலேயே அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.அக்டோபரில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் என்று சொல்லப்பட்டது.ஆனால் அப்போது பெய்த பெருமழை காரணமாகப் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது.
இப்போது அப்படத்தின் முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.இதன்பின் மொத்தமாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் சில நாட்கள் பேட்ச் ஒர்க் எனப்படும் விடுபட்ட காட்சிகளைப் படமாக்குவார்கள் என்று சொல்கிறார்கள்.பெரும்பகுதி அதற்குத் தேவையிருக்காது என்று இயக்குநர் தரப்பு சொல்லியிருக்கிறதாம்.
படத்தின் தயாரிப்புப் பொறுப்பில் இணைந்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை முழுமையாகப் பார்த்து சில திருத்தங்கள் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் படப்பிடிப்பு நடத்தாமலேயே செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்போது படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது.
பல மாதங்கள் தடைபட்டிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு சனவரி தொடக்கத்தில் தொடங்கவிருக்கிறது என்றும் சனவரி இறுதிக்குள் மொத்தமாக நிறைவடைந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
எனவே 2025 சனவரி இறுதிக்குள் இரண்டு படங்களும் முழுமையாகத் தயாராகிவிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அதன்பின் எந்தப்படத்தை முதலில் வெளியிடுவது என்கிற முடிவை எடுப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ப்ளடி பெக்கர் படத்துக்கு அடுத்த படமாக வெளிவரவிருக்கும் படம் என்பதால் காதலை மையமாகக் கொண்ட கிஸ் படம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்பது கவினின் எண்ணம்.அதேசமயம் கிஸ் படத்தில் ஒரு பெரியமாற்றம் நடக்கவிருக்கிறது என்பதால் அதன் வெளியீடு தாமதமாக வாய்ப்பு இருக்கிறது.
அப்படி நடந்தால் முதலில் மாஸ்க் வெளியாகும் என்கிறார்கள்.











