சினிமா செய்திகள்

சொக்க தங்கம் காணலியே! எங்கள் அண்ணா பேசலியே!! – கண்ணீர் பாடல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த், நேற்று காலை ஆறு பத்து மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஏராளமான பொதுமக்களும் அவருக்குக் கண்ணீர் வணக்கம் செய்துவருகின்றனர்.

அவருடைய உடல் இன்று மாலை கோயம்பேட்டிலுள்ள அவருடைய கட்சி அலுவலக வளாகத்தில் முழுஅரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கவிஞர்கள் அவருக்கு இரங்கற்பா எழுதுகின்றனர்.

அவற்றில் ஒன்றாக உருவாகி பல்வேறு தரப்பிலும் பாராட்டுப் பெற்று வரும் பாடல்வரிகள் கீழே.

இது கவிஞர் செந்தமிழ் எழுதியுள்ள பாடல். சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் அப்பாடல் கணொலியில் இடம்பெற்றுள்ள வரிகள்….

பல்லவி:

சொக்க தங்கம் காணலியே/
எங்கள் அண்ணா பேசலியே/

வானத்த போல மனசு கொண்டவரே/
வாஞ்சிநாதன் வீரத்தோடு நின்றவரே/
தர்மத்தின் சக்கரம் நின்னு போனதையா/
வல்லரசு கனவு ஒன்னு மாண்டதையா/

சரணம் #1

ஏழை பால ஜனமெல்லாம் வயிறார பசியாற
நீ போட்ட சோறு எல்லாம் தொண்டைக்குள்ள நிக்குதய்யா/

ராஜநடை நீ போட்டு/ ராஜ்ஜியமா வரும்போது/
தமிழுக்கு இன்னொரு தலைவன் கிடைச்சாருன்னு நினைச்சோம் ஐயா/

செந்தூர பாண்டியனே
சேவை செய்த தென்னவனே/
ஊமை விழிகள் இப்போது
ஊமையா தூங்குதையா/

சொக்க தங்கம் காணலியே/
எங்கள் அண்ணா பேசலியே

சரணம் #2

அம்மன் கோவில் கிழக்காலே/
சாமி நிண்ணு பாக்குதையா/
ஆலமரம் வேரோடு
அடி சாஞ்சி போனதையா/

வாழ்க்கை ஒரு விளையாட்டு/
ஆடிப்பாடு எசப்பாட்டு/
பேரரசு சத்திரனே/
பேசாம போனதென்ன/

மாநகர காவலனே
கேப்டன் பிரபாகரனே
ஊமை விழிகள் இப்போது
ஊமையா தூங்குதையா/

சொக்க தங்கம் காணலியே/
எங்கள் அண்ணா பேசலியே

பாடல்: செந்தமிழ்
இசை&குரல்: ஷாஜகான்

Related Posts