செய்திக் குறிப்புகள்

ஆர்.ஜே.விஜய் நாயகனாகிறார் அம்பேத்குமார் தயாரிக்கிறார்

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் ஒலிம்பியா மூவிஸ்.

இந்த, ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிசம்பர் 12,2023) தொடங்கியது

ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஆர்ஜே.விஜய் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன், ​​மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சிவசங்கர் இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார், தேர்ந்தெடுத்துத் தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

நல்ல கதைகளுக்குப் பார்வையாளர்கள் கொடுத்து வரும் உற்சாக வரவேற்பை அடுத்து, தற்போது ஆர்ஜே. விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் மற்றொரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எஸ்.அம்பேத்குமார்.

கணவன்-மனைவிக்கிடையே இடையே ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மோதல்கள்தான் படத்தின் ஒருவரிக்கதை. பல கனவுகள் கொண்ட ஒருவன் குடும்பத்திற்காக தனது கனவுகளைத் தியாகம் செய்து, நல்ல கணவனாக வாழ்வில் வெற்றியடைகிறான் என்பது திரைக்கதை. பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் சுவையான காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் கொண்டதாக இப்படம் இருக்கும் என்கிறார்கள்.

இன்னொரு நாயகன் உருவாகிறார்.

Related Posts