சினிமா செய்திகள்

பிரிந்த கணவரை நினைத்து ஏங்கும் சமந்தா?

தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் போய் முன்னணி நடிகையாகி மீண்டும் தமிழுக்கு வந்து இங்கும் முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றிருப்பவர் சமந்தா.

செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தபோதுதான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.சுமார் எட்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பின் அந்தப்படத்தில் நடித்தார். இப்போது அது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

முழுவதும் குணமடையாததால் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகவும் இதற்காக ஒரு வருடம் அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், தோழியுடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற அவர், ‘குஷி’ படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அதை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 18 அன்று ஐதாராபாத்தில் இருந்து நியூயார்க் சென்றுள்ளார். அவருடன் அவர் தாயாரும் சென்றுள்ளார்.

அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா முழுவதும் குணமடைந்த பின் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது.

அங்கு போனவுடன் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் சென்று அங்கொரு இருக்கையில் ஏகாந்தமாக அமர்ந்து கொண்டு ஒரு புகைப்படம் மற்றும் சில புகைப்படங்கள் எடுத்து அவற்றைப் பகிர்ந்திருக்கிறார். அதோடு இது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியான இடம் என்றும் கூறியுள்ளார்.

இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறதென்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

சமந்தா, 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்கள் கழித்து அதாவது அக்டோபர் 2, 2021 அன்று, நாக சைத்தன்யா – சமந்தா ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்…..

எங்களின் நலன் விரும்பிகளுக்கும் இதனைச் சொல்லிக் கொள்கிறோம்.

நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் நாகசைதன்யாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.

இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

நாகசைத்தன்யாவும், சமந்தாவும் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அந்தக்காட்சி படமாக்கப்பட்ட இடம் இதே நியூயார்க் சென்ட்ரல் பார்க். இப்போது அவர் பகிர்ந்திருக்கும் படங்களில் உள்ள இடங்களில் எல்லாம் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

கணவரைப் பிரிந்து இரண்டாண்டுகள் கழித்து அவரோடு இணைந்து நடித்த இடத்தில் அமர்ந்து என் மனதுக்கு நெருக்கமான இடம் என்று சொல்லியிருக்கிறார்.

இதனால், நாகசைத்தன்யாவைப் பிரிந்திருந்தாலும் சமந்தாவின் எண்ணமெல்லாம் நாகசைத்தன்யா நிறைந்திருக்கிறார் என்றும் அவர் நாகசைத்தன்யாவின் அன்புக்கு ஏங்குகிறார் என்றும் சொல்கிறார்கள்.

பிரபல நடிகை என்றாலும் அவரும் பெண் தானே? அவருக்கும் அன்பு தேவைதானே?

Related Posts