சினிமா செய்திகள் நடிகை

7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப்படத்தில் நடிக்கும் குஷ்பு

தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்த குஷ்பு, அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் தயாரிக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வருவார்.

2011 இல் வெளியான இளைஞன் படத்துக்குப் பிறகு அவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை.

இப்போது தயாராகும் ட்ராபிக்ராமசாமி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அதுபற்றி அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…

தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது.

கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார்.அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத்தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர்.

இப்படத்தில், பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர்,ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா,கஸ்தூரி,மனோபாலா,மதன்பாப்,லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி,மோகன்ராம்,சேத்தன்,தரணி,அம்மு ராமச்சந்திரன்,பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர்.

இவர்களோடு, அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வருகிற சீமானும் குஷ்புவும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் .

சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு,அரசியல் என்று இருப்பவர் குஷ்பு. இவர்கள் இருவரும் அரசியலில் கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள்.

இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது .இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.

Related Posts