பத்திரிகையாளர் ஜியா இயக்கியுள்ள குறும்படம் – ஜூன் 22 வெளியாகிறது
புகழ்பெற்ற பத்திரிகையாளராக அறியப்பட்ட ஜியா, தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறியிருக்கிறார்.
அவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படத்தின் பெயர் கள்வா.
மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் (king pictures) யூடியூப் சேனலில் வெளியாகிறது.
இக்குறும்படத்தில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்து வரும் ‘கள்வா’ படம், ரொமான்டிக் திரில்லர் வகையைச் சேர்ந்தது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜியா கூறியதாவது….
‘கள்வா படத்தின் முதல்பார்வை வெளியானதிலிருந்து இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இது திரில்லர் படமென்றாலும் ஆழமான காதலும் இருக்கிறது. ஜூன் 22 ஆம் தேதி படம் வெளியாகும்போது இரசிகர்களை நிச்சயம் கவரும்’
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு முழுநீளத் திரைப்படத்துக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் இக்குறும்படம் விரைவில் முழுநீளத் திரைப்படமாகவும் மாறும் என்கிறார்கள்.











