செய்திக் குறிப்புகள்

விஜய் படப்பெயரில் விஜய்தேவரகொண்டா படம் – செப்டம்பர் 1 இல் வெளியீடு

2000 ஆம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் குஷி.23 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் தேவரகொண்டா- சமந்தா ஜோடியின் நட்சத்திர மதிப்பிற்கு இரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பல மொழிகளில் வெளியாகிறது.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக வடிவமைப்பை விஜய் தேவரகொண்டாவும் நடிகை சமந்தாவும் காதலுடன் கைகோர்த்துக்கொண்டு தோன்றுவது இரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இந்த அறிவிப்பை விஜய்தேவரகொண்டா இரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்,

Related Posts