சினிமா செய்திகள்

அகிலன் படக்குழு மகிழ்ச்சி – காரணம் என்ன?

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.இவற்றில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி கதாபாத்திரம்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்தப்படத்தின் முதல் பாடலான ‘துரோகம்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப்பாடலை சாம் சி.எஸ், சிவம் இணைந்து பாடியுள்ளனர்.

‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆனால் இதுவரை இப்படத்தின் வியாபாரம் எதுவும் நடக்கவில்லை.

அதனால் படத்தயாரிப்பு நிறுவனம் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை அணுகி இந்த்ப்படத்தை வெளியிடும்படி கேட்டுக்கொண்டதாம்.

ரெட்ஜெயண்ட் நிறுவனமும் அக்கோரிக்கையை ஏற்று படத்தை வெளியிட ஒப்புக்கொண்டதாம்.ஆனால் அந்நிறுவனத்தின் பெயர் போடாமல் வெளியிடவிருக்கிறார்களாம.

ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருப்பதால் இப்படத்துக்கு அதிக திரையரங்குகள் மற்றும் முதல்நிலை திரையரங்குகள் கிடைக்கும் என்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

Related Posts