சினிமா செய்திகள்

நல்ல சம்பளம் நட்புக்கும் மரியாதை – அசத்தும் சந்தானம்

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அஜீத்தின் 62 ஆவது படத்தைத் தயாரிக்கிறது.

இதுதொடர்பாக அந்நிறுவனம்,2022 மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்.அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஏற்றிருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கும், அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும். படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

அஜீத்தோடு இணைந்து பணியாற்றுவதில் லைகா நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

அதன்பின் அப்படம் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேசமயம் அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவிருக்கிறது என்றும் அப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வாலும் வில்லனாக அரவிந்த்சாமியும் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியதிலிருந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாத சந்தானம், இந்தப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிரார்கள்.

அவர் எப்படி ஒப்புக்கொண்டார்? என்று கேட்டால், அவர் கதாநாயகனாக நடிக்க மூன்றிலிருந்து ஐந்துகோடிவரை படத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறார், இந்தப்படத்தில் நடிக்க அவருக்கு பத்துகோடி சம்பளம், இதர வசதிகள் மற்றும் அதற்கான வரி என்று பேசப்பட்டதாம்.இதனால் இப்படம் மூலம் சுமார் பனிரெண்டு கோடி அவருக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு தற்போது லைகாவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழ்க்குமரனுடனான நட்பின் காரணமாகவும் இந்தப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.

Related Posts