சினிமா செய்திகள்

ஏமாற்றும் வினய் வருத்தத்தில் ஹரீஷ்கல்யாண்

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க,சாய்குமார்,கருணாஸ், வினய் ராய், அன்னையா,அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா,தீனா (தினேஷ்), தங்கதுரை, லட்சுமி சங்கர்,தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார்.சச்சின், ரமேஷ் திலக், செல்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி எழுதி இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.ஷான் லோகேஷ் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இந்த படத்தின் முதல்பார்வை மற்றும் இரண்டாம்பார்வை ஆகியன வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர் வினய் வில்லனாக நடித்துவருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக தேதிகள் தர ஒப்புக்கொண்ட அவர், சொன்னபடி படப்பிடிப்புக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்புக்கு வர ஒப்புக்கொள்வாராம். அந்தத் தேதியில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டால், தனக்கு உடல்நலக்குறைவு, அம்மாவுக்கு உடல்நலக்குறைவு என ஏதேதோ காரணங்களைச் சொல்லி படப்பிடிப்புக்கு வரமாட்டாராம்.

ஆனால் அதே தேதிகளில் வேறு படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்துகொண்டார் என்று தெரியவந்துள்ளது.ஒருமுறைக்குப் பலமுறை அவர் இவ்வாறு செய்ததால் இவர்களால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம்.

இதனால் டீசல் படக்குழுவினர் கொந்தளித்துவிட்டார்களாம். அதன்பின் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகியனவற்றில் அவர் மீது புகார் சொல்லியிருக்கிறார்களாம்.

அவ்விரு அமைப்புகளிலிருந்து வினய்யிடம் பேசியும் இன்னும் முறையாகப் பதில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சும்மா இருந்த அவரை எங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்தோம், திடீரென வந்த தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எங்கள் படத்துக்கு வராமல் இழுத்தடிக்கிறார் என்று டீசல் படக்குழு புலம்பிக் கொண்டிருக்கிறதாம்.

முதன்முறையாக ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்த ஹரீஷ்கல்யாண், இதனால் சோர்வடைந்திருக்கிறாராம்.

Related Posts