சினிமா செய்திகள்

சசிகுமார் படத்தில் உதயநிதி

நரேன் நடித்த கத்துக்குட்டி,ஜோதிகா சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதன்பின், ஒரு முக்கியவேடத்தில் சில நாட்கள் மட்டும் நடிக்கிற மாதிரி ஒரு வேடம் இருக்கிறது என்று சொல்லி சசிகுமாரை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள்.

அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமாரின் வேடத்தைப் பெரிதுபடுத்தி அவரையே கதாநாயகன் ஆக்கிவிட்டார்கள்.

அதனால் அப்படத்திலிருந்து கருணாஸ் விலகிக்கொண்டார்.

இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றிருக்கிறது.

அதன்பின்னர், படத்தில் ஒரு புதியபாத்திரம் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். புதிதாகச் சேர்க்கப்பட்ட அரசாங்க அதிகாரி வேடத்தில் உதயநிதி நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து அவரைக் கேட்டார்களாம்.

ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என்பதால் அவரும் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சசிகுமார் படத்தில் கவுரவவேடத்தில் உதயநிதி நடிக்கிறார் என்பதால் அந்தப்படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது.

Related Posts