தனுஷின் வாத்தி வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த செய்திக்குறிப்பு….
தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள வாத்தி படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார்.சம்யுக்தா மேனன் முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.
‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகின்றனர்.
வாத்தி படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி இரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











