வில்லனாக நடிக்கிறார் கமல்
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் ரஜினிகாந்த்தின் அருணாச்சலா ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் இன்னொரு சிறப்பம்சமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அது என்னவென்றால்…
படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் வில்லன் வேடம் பெரிதாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம்? என்கிற கேள்வி எழுந்த நேரத்தில், அந்த வேடம் குறித்து முழுமையாகக் கேட்டறிந்த கமல், அதில் நானே நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
இதனால், ரஜினிகாந்த் லோகேஷ்கனகராஜ் உள்ளிட்டோர் மிகுந்த வியப்படைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்கிறார் என்பதால் அப்படம் தொடங்கும்போதே மிகுந்த பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் அமையும் என்பதில் மாற்றமில்லை.











