சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய பா.விஜய் – ஜீவா படம் கைமாறியது – விரைவில் தொடக்கம்

பிரபல பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் இயக்கத்தில் அர்ஜூன்,ஜீவா,ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மேதாவி.

மேலும், சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னார்கள்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வை – கணேஷ் என்றும் சொல்லப்பட்டது.

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட இந்தப்படத்தின் தொடக்கவிழா 2020 மே மாதத்தில் நடந்தது.

தொடங்கியதுமே படத்தின் தயாரிப்பாளர் குறித்த பெரும் சர்ச்சை ஒன்றும் உருவானது. அதோடு அப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

ஓராண்டுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இம்முறை அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர் மாற்றம் மட்டுமின்றி படத்தின் பெயரையும் மாற்றிவிடத் திட்டமிட்டிருக்கிறாராம் பா.விஜய்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts