ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் அன்பறிவ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் ஆகிய இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ” துர்கா “.இப்படம் குறித்த அறிவிப்பு 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியானது.
அப்போது, இப்படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.
இந்நிலையில் இன்று, துர்கா படத்தை பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் ஆகிய இரட்டையர்கள் இயக்குகிறார்கள் என்று ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகையர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.











