கதாநாயகன் ஆகிறார் சித்ஸ்ரீராம்
தமிழில் பிரபலமாக இருக்கும் பின்னணிப்பாடகர் சித்ஸ்ரீராம். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை.
மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் ஆனார்.
பாடகராகத் தெரிந்தவரை இசையமைப்பாளராக மாற்றிய மணிரத்னம், இப்போது சித்ஸ்ரீராமை இன்னொரு விதமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறாராம்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இதற்கடுத்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் பணிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறாராம்.
அந்தப்படத்தில் சித்ஸ்ரீராமை கதாநாயகனாக அறிமுகப்படுத்தவிருக்கிறாராம் மணிரத்னம்.
இதற்காக, நடிப்புப் பயிற்சி, நடனப்பயிற்சி, சண்டைப்பயிற்சி ஆகிய பயிற்சிகளை சித்ஸ்ரீராம் எடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்குள் அவர் பயிற்சிகள் எடுத்துத் தயாராகிவிடுவார் என்றும் அப்போது அந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.












