இஸ்லாமிய நண்பர்கள் இப்படிச் செய்யலாமா? – புலம்பும் யோகிபாபு
நடிகர் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் மலையோரம் வீசும் காத்து. இப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
அங்கு படப்பிடிப்பு நடந்த நேரத்தில் யோகிபாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும் ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் நடந்தது. ஒன்றாகப் பணியாற்றும் போது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வழக்கப்படி இது நடந்துள்ளது.
மோதல் அடிதடிவரை போனதால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமளவுக்குச் சென்றுவிட்டது.
காவல்துறையினர் விசாரித்து சமரசம் செய்து வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சிக்கல் அதோடு தீரவில்லை.
சதாம் உசேன், தன் சொந்த ஊர் ஜமாத்தில் இதுகுறித்துப் புகார் அளித்தாராம். அவர்கள் தேனி ஜமாத்தில் இச்செய்தியைச் சொல்லியிருக்கின்றனர்.
உடனே தேனி ஜமாத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து யோகிபாபுவை முற்றுகையிட்டுள்ளனர்.
அவர்களோடும் சமாதானமாகப் பேசி சிக்கலை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேசமயம், சாதி, மதம் பாராமல் பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது தெரிந்தவர்களின் பரிந்துரையின் அடிப்படையிலோ ஒருவரை வேலைக்கு வைக்கிறோம், ஒரு சிக்கல் என்று வந்தால் தன் சாதி மற்றும் மதத்துக்காரர்களை கூட்டிவந்து சிக்கல் செய்வது என்ன நியாயம்? ஒவ்வொருவரும் ஏதோவொரு சாதியையோ மதத்தையோ சார்ந்தவர்தான். எல்லோரும் இப்படிக் கிளம்பினால் என்னாவது? என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் யோகிபாபு.











